வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கலைஞரும் நானும் – சுஜாதா.



எந்த மாநிலத்திலும் இத்தனை இலக்கிய ஆர்வமும் அறிவும் உள்ள முதல்வர்கள் இருந்திருக்கிறார்களா; தெரியவில்லை. கலைஞர் கைதாகி விடுதலையான பின் அவரை இல்லத்தில் சந்தித்தேன். அப்போது கேட்டினும் உண்டோர் உறுதிஎன்கிற குறளை உதாரணமாகச் சொன்னார். அவரை நான் சந்தித்த தருணங்களில் எல்லாம் அரசியல் எதுவும் பேசியதில்லை.

கலைஞரின் வாழ்வில் உள்ள போராட்டங்களையும் வெற்றிகளையும் சற்று தூரத்திலிருந்து பார்த்து வந்திருக்கிறேன். அவரது இலக்கிய வாழ்வுக்கு நெருக்கமான நண்பன், சக எழுத்தாளன் என்கிற தகுதியில் கலைஞருக்கு எண்பது வயதாகும்போது வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்என்று சம்பிரதாயமாகச் சொல்லி தப்பித்துக் கொள்ள விருப்பமில்லை. எங்கள் வைணவ சம்பிரதாயத்தில் இந்த வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. ‘இன்னுமொரு நூற்றாண்டிரும்என்று அவரை வாழ்த்துகிறேன்.